“டாக்டர் ராஜ்குமார்” காந்தடகோடி மற்றும் “அமிதாப் பச்சன்” ஷோலே திரைப்படத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை ரியல் ஸ்டார் ம் “உபேந்திரா” இந்த திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளதை ரியல் ஸ்டார் உபேந்திரா தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்,
இந்த பெரிய செய்தி ரசிகர்களிடையே இந்த திரைப்படத்தை குறித்து பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
பெங்களூரு கன் ஹவுஸில் இருந்து வாடகைக்கு துப்பாக்கிகளை எடுத்து இயக்குனர் ஆர் சந்த்ரு இயல்பாகவே “கப்ஸா” உடன் ஒரு முக்கிய தொடர்பைக் கொண்டு வருகிறார்.
துப்பாக்கிகளைப் பயன்படுத்த பெங்களூர் கன் ஹவுஸ் அனுமதி அளித்துள்ளது.
“கப்ஸா” திரைப்படம் 170 முதல் 200 நாட்கள் என ஐந்து நிலைகளாக படமாக்க திட்டமிட பட்டுள்ளது.
இப்படத்தின் முக்கியமான 35 நாள் ஏற்கனவே பெங்களூரில் படமாக்கப்பட்டுள்ளது.
எம்டிபி நாகராஜ் தயாரிக்கும் “கப்ஸா” திரைப்படம்
ஸ்ரீ சித்தேஷ்வர் எண்டர்பிரைசஸின் பேனரில் 2021 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் முன்னணி கதாபாத்திரத்தை இறுதி செய்யும் செயல்முறை நடந்து வருகிறது.
.இப்படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு தமிழில்
தெலுங்கு, இந்தி, மராத்தி, ஒரியா மற்றும் மலையாளத்தில் வெளிவாகவுள்ளது.
“கப்ஸா” படத்திற்கான ஒளிப்பதிவை அர்ஜுன் ஷெட்டி கையாளுகிறார்.
ரியல் ஸ்டார் “உபேந்திரா” முக்கிய கதாபாத்திரத்திலும், தயாரிப்பாளர்-நடிகர் நவீன்,
கபீர் டுஹான் சிங், கோட்டா சீனிவாச ராவ், ஜெயபிரகாஷ், கேட் ராஜு, சுப்பராஜு,
எம் காமராஜ், அவினாஷ் மற்றும் பல கலைஞர்கள் நடித்துள்ளனர்